கடிதத்தில் வந்த குண்டு வெடித்ததில் கிரீஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் லூகாஸ் பாபாடேமஸுக்கு காயம் ஏற்பட்டது. மார்பு, வயிறு மற்றும் கைகளில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமக்கு வந்த ஒரு கடிதத்தை பாபாடமேஸ் பிரித்தபோது, அதற்குள் இருந்த குண்டு வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.