உலகம்

85 நோயாளிகளை கொன்ற ஜெர்மன் செவிலியருக்கு ஆயுள் தண்டனை!

webteam

ஜெர்மனியில் 85 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஜெர்மனியில் ஆண் செவிலியராக பணியாற்றியவர் நீல்ஸ் ஹோஜல் (Niels Hoegel)  வயது 42. பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றிய இவர், நோயாளிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தி, தனது திறமையால் அவர்களை பிழைக்க வைப்பதற்கு முயல்வார். இந்த முயற்சியில் அவர் சுமார் 85 பேரை கொலை செய்துள்ளார். இந்த தொடர் கொலையாளியின் செயல் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகப் போருக்குப் பின் நடத்தப்பட்ட மிக மோசமான தொடர் கொலை இது என்று கூறப்படுகிறது. 

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீல்ஸ் ஹோஜலுக்கு ஆயுள் தண்டனை விதித் துள்ளது. 

இவர், முதல் கட்ட விசாரணையில் டெல்மெர்ன்ஹாஸ்ட் மருத்துவமனையில் 90 நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தியதாகவும் பின்பு ஓல்டென்பெர்க் மருத்துவமனையில் 10 பேரை கொன்றதாகவும் கூறியுள்ளார். மொத்தம் நூறு கொலைகளை செய்வதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். 15 கொலைகளுக்கு ஆதாரம் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.