உலகம்

அமெரிக்கா ஹீமெட் நகரில் காட்டுத்தீ - 2 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பு எரிந்து சாம்பலானது!

webteam

அமெரிக்காவில் வனப்பகுதியில் பற்றி எரிந்த நெருப்பில், இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் இருந்த மரங்கள், செடி கொடிகள் சாம்பலாகின. கலிஃபோர்னியா மாகாணத்தின் ஹீமெட் (Hemet) என்ற நகரின் அருகே உள்ள வனப்பகுதியில் திங்களன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அடுத்தடுத்து பற்றிப் பரவிய நெருப்பு,
மரங்களயும் செடி கொடிகள் உள்ளிட்ட தாவரங்களையும் எரித்து சாம்பலாக்கியது.

வனப்பகுதியின் அருகே உள்ள ரிசார்ட்டுகளும் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளும் தீக்கிரையாகின. அங்கு வசித்த இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். நெருப்பை கட்டுப்படுத்தும் பணிகளில் 260க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்களுடன், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.