உலகம்

பாகிஸ்தானை தொடர்ந்து இலங்கையிலும் குறைக்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலை!

webteam

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அந்நாட்டு ரூபாய் மதிப்பில் லிட்டருக்கு தலா 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இலங்கையிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையில் குறைந்த அளவிலேயே பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்படுவதால் அதற்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

முன்னதாக, சமீபத்தில் பாகிஸ்தானிலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றும்போது, “தற்போது கடவுளின் ஆசியுடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது. கடவுளின் கருணையால் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது” என தெரிவித்தார். இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.40.54-ம் குறைக்கப்படுவதாக அறிவித்து மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.