துருக்கியில் இரண்டு மணி நேரம் மட்டுமே பெய்த கன மழையினால் தலைநகர் இஸ்தான்புல் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.
துருக்கியின் இஸ்தான்புல் மற்றும் சிலிவ்ரி ஆகிய நகரங்களில் காலையில் கன மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையினால், அந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால், பெரும்பாலான மக்கள் வீட்டின் கூரைப்பகுதியில் தவித்து வருகின்றனர்.
இந்த கனமழையின் போது 6,700 மின்னல்கள் தாக்கியுள்ளன, ஒரு கன சதுர மீட்டருக்கு 65 கிலோகிராம் அளவு மழை பெய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.