உலகம்

ரஷ்யாவில் விமான விபத்து: பயணித்த 71பேரும் உயிரிழப்பு

ரஷ்யாவில் விமான விபத்து: பயணித்த 71பேரும் உயிரிழப்பு

Rasus

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே 71 பேருடன் சென்ற விமானம் விபத்திற்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ டோமோடேடோவா விமான நிலையத்தில் இருந்து, அண்டோனோவ் அன்- 148 என்ற விமானம், 65 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றது. ஆர்ஸ்க் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென ரேடாரின் தகவல்தொடர்பில் இருந்து விமானம் காணாமல்போனது. இதனையடுத்து விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

இந்த விபத்தில் விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற அந்நாட்டு காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.