உலகம்

ஆப்கானிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு.. 70-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு.. 70-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

webteam

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடக்கே ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், 70க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காபூல் நகரின் எல்லைப்பகுதியான பார்வான் மாகாணத்தில் அதிகாலை நேரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் உறங்கிகொண்டிருந்த பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். 300 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

மண்ணால் மூடப்பட்ட உடல்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களும் ஈடுபட்டுவருகின்றனர். இதுவரையில் வெள்ளத்தில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் எட்டு மாகாணங்களிலும் வெள்ளத்தால் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆப்கனின் பேரிடர் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.