உலகம்

வெப்பத்தால் பற்றி எரிந்த மரம் - ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கோடை வெயில்

வெப்பத்தால் பற்றி எரிந்த மரம் - ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கோடை வெயில்

webteam

ஐரோப்பா முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிரான்ஸில், நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்திருந்த மரம் வெப்பத்தால் தீப்பற்றி எரிந்ததால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து உள்பட ஐரோப்பா முழுவதும் கடந்த சில வாரங்கள் கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரான்ஸின் மாண்ட்பெல்லியர் என்ற பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்திருந்த மரம் வெப்பத்தால் தீப்பற்றி எரிந்தது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பல அடி உயரத்துக்கு கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.