உலகம்

எல்லை தாண்டும்‌ மீனவர்களுக்கு பலமடங்கு அபராதம்

எல்லை தாண்டும்‌ மீனவர்களுக்கு பலமடங்கு அபராதம்

rajakannan

கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அபராதத் தொகையை பலமடங்கு அதிகரிக்கும் மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 

இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தம் அமையும் என இலங்கை கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்தார். அந்தவகையில் இலங்கை கடற்எல்லையில் அத்துமீறி மீன்பிடிக்கும் மீன்வர்களுக்கு அபராத தொகை உயர்த்தப்படவுள்ளது. 

இதுவரையில் நடைமுறையில் இருந்த 15 லட்சம் ரூபாய் அபராதத்தொகை, தற்போது கொண்டுவரவுள்ள சட்டத்தில் 17.5 கோடி வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்படும் படகுகளின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜ‌ராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இலங்கை அரசின் புதிய சட்டம் தமிழக மீனவர்களை அதிகம் பாதிக்கும் என்று பார்க்கப்படுகிறது.