உலகம்

அமெரிக்க அரசியலில் சாதித்துக் காட்டிய திருநங்கை

அமெரிக்க அரசியலில் சாதித்துக் காட்டிய திருநங்கை

Sinekadhara

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செனட்டராக தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

அமெரிக்காவின் டெலாவர் மாகாணத்தில் சாரா மெக்ப்ரைட்(30) என்ற திருநங்கை 86 சதவீத வாக்குகளைப் பெற்று முதல் திருநங்கை செனட்டராக பொறுப்பேற்கவுள்ளார். அவர் பொதுத்தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதேபோல் வெர்மாண்ட் மாகாணத்தின் வடக்குப்பகுதியில் டெய்லர் ஸ்மால்(26), இரண்டு மாவட்டங்களில் 43சதவீதம் மற்றும் 41 சதவீதம் வாக்குகளைப் பெற்று மாகாணத்தின் முதல் திருநங்கை பிரதிநிதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு டெமக்ராட் டானிகா, வெர்ஜீனியா மாகாணத் தேர்தலில் போட்டியிட்டார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு, வெர்மான்ட் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிறிஸ்டின் ஹால்விஸ்ட் என்ற திருநங்கை அமெரிக்காவின் ஒரு பெரிய கட்சியால் ஆளுநராக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

எல்.ஜி.பி.டி நபர்கள் அதிகம் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என ஆர்வம்காட்டிய தி விக்டரி ஃபண்ட் நிறுவனமானது, மெக்பிரைட் மற்றும் டெய்லர் ஸ்மாலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.