உலகம்

உலகின் முதல் கொரோனா நோயாளி இவர்தான்: அடித்துக் கூறும் ஆராய்ச்சியாளர் !

jagadeesh

உலகின் முதல் கொரோனா நோயாளி சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருக்கும் ஒரு வியாபாரிதான் என்று புகழ்பெற்ற வைரஸ் ஆராய்ச்சியாளர் மைக்கல் வோரபே தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் பல நாடுகளை இன்றளவுக்கும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இன்றளவும் அது தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் "ஜர்ணல் சைன்ஸ்" எழுதியுள்ள வைரஸ் ஆராய்ச்சியாளர் மைக்கல் வோரபே "நாம் அனைவரும் உலகின் முதல் கொரோனா நோயாளி ஒரு ஆண் என்று இத்தனை நாளாக நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் அது உண்மையல்ல. அந்த நபர் ஒருபோதும் வூஹாண் சந்தைக்கு வந்ததில்லை. அவருக்கும் அந்த சந்தைக்கும் தொடர்பும் இல்லை. ஆனால் கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டது ஒரு பெண்தான். அந்த்ப் பெண் வூஹாண் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்" என்றார்.

மேலும் "அந்தப் பெண் வூஹாண் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருபவர். இந்தப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு வந்த பின்பு 8 நாள் கழித்துதான் அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். எனவே வூஹான் சந்தையில் இருந்துதான் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். வூஹான் சந்தைக்கு கொரோனா பரவிய பின்புதான் ஹூனான் சந்தைக்கு கொரோனா பரவ தொடங்கியுள்ளது. அசைவ உணவுகளை வியாபாரம் செய்யும் இடத்தில் இருந்துதான் இந்த வரைஸ் வேகமாக பரவியுள்ளது என்பதும் நிரூபனமாகியுள்ளது" என்றார் மைக்கல் வோரபே.