இந்திய – கொரிய – தமிழ் ஆய்வு மாநாடு pt
உலகம்

தென் கொரியாவில் நடைபெற்ற முதல் இந்திய – கொரிய – தமிழ் ஆய்வு மாநாடு!

தென் கொரிய தமிழ் சங்கம், ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சார்பில், தென் கொரியாவில் முதல் இந்திய – கொரிய – தமிழ் ஆய்வு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

PT WEB

தென் கொரிய தமிழ் சங்கம், ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சார்பில், தென் கொரியாவில் முதல் இந்திய – கொரிய – தமிழ் ஆய்வு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு வழங்கிய அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை தென் கொரியாவில் நிறுவப்பட்டது. தமிழின் தொன்மை, பண்பாடு, அறநெறி மற்றும் உலகளாவிய சிந்தனைகளைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, தமிழ் மொழியின் சர்வதேசப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இம்மாநாட்டில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோசம், லண்டன் குராய்டன் (Croydon) மாநகரின் முன்னாள் துணை மேயரும், கவுன்சிலருமான அப்பு தாமோதரன் சீனிவாசன், முனைவர் பாட்டழகன் மேலும், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியச் செழுமை, பண்பாட்டு மரபுகள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்த தங்களது கருத்துகளையும் ஆய்வுகளையும் பங்குபெற்றோர் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதோடு, தமிழின் பெருமையையும் திருவள்ளுவரின் உலகளாவிய அறச்சிந்தனைகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இம்மாநாடு அமைந்தது. குறிப்பாக, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இத்தகைய சர்வதேச மாநாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. தென் கொரிய மண்ணில் அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டிருப்பது, தமிழின் பெருமையையும் திருக்குறளின் உலகப் பொதுமையையும் பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.