உலகம்

புலி, சிங்கம், பூனை வரிசையில் அமெரிக்காவில் நாய்க்கு கொரோனா

புலி, சிங்கம், பூனை வரிசையில் அமெரிக்காவில் நாய்க்கு கொரோனா

webteam

அமெரிக்காவில் முதல்முறையாக நாய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பாதித்து வருகிறது. முன்னதாக ஹாங்காங்கில் 2 நாய்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புலிகள், ஆப்பிரிக்க சிங்கங்கள் மற்றும் பூனைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த வரிசையில் நாயும் இணைந்துள்ளது.

வடக்கு கரோலினாவில் வசித்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவரின் நாய்க்கு கோரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கொரோனா பாதித்தவருடன் நாய் உறங்கியதாலும் அவர் உணவு அருந்திய தட்டிலேயே நாய சாப்பிட்டதாலும் தான் நாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும், மனிதர்களிடையே கொரோனா பரவுவது போல், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் சாத்தியகூறுகள் மிக குறைவு என ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.