தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள், ஃபிரிட்ஜ்ஜை திறந்து பாலை குடித்துவிட்டு கடிதமும் எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் பெரும் பகுதி நிலம் வனம் தான். அங்கு நியூ சவுத் வால்ஸ் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ பரவியது., அதில் பவுல் ஸ்கிபி என்பவரது வீடும் விபத்தில் சிக்கியது .அப்போது அவர் வீட்டில் இல்லை, ஆனால் வீடு தீ பற்றிக் கொண்ட தகவல் கிடைத்தும் அங்கு விரைந்து சென்ற உருங்கா தீயணைப்பு சேவை வீரர்கள், பவுல் ஸ்கிபியின் வீட்டை தீயிலிருந்து காப்பாற்ற போராடினர். ஆனால் வீட்டில் சில கூரைகள் பவுலின் அவரது பைக் உள்ளிட்டவை தீயில் எரிந்து சாம்பலானது. பத்து சதவிகித வீட்டை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
நீண்ட நேரமாக உணவு தண்ணீர் இன்றி போராடிய வீரர்கள், பவுலின் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜை திறந்து அதிலிருந்த பால், வெண்ணைய், பாதாம் உள்ளிட்ட வற்றை தின்று பசியாறினர். ஹார்டி போர்ட்டர், எனும் வீரரும் அந்தக் குழுவில் பணியாற்றியிருக்கிறார். அவர் அந்த வீட்டை விட்டு கிளம்பு முன் வீட்டின் ஓனர் பவுலிற்கு ஒரு துண்டுச் சீட்டில் செய்தியொன்றை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்.,
அதில் “பவுல் அவர்களே, நாங்கள் உங்கள் வீட்டை காப்பாற்ற போராடியது எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. ஆனால் உங்கள் வீட்டின் சில கூரைகள் எரிந்து போனதை எங்களால் தடுக்க முடியவில்லை. நாங்கள் நீண்ட நேரம் பசியோடு இருந்ததால் உங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து குடித்துவிட்டோம்.” என எழுதிவைத்திருக்கிறார்.
அதனைக் கண்ட பவுல் அந்த கடிதத்தை முகநூலில் பதிவிட்டு, ”வீரர்கள் பால் மட்டுமல்ல அங்கிருந்த வெண்ணைய் பாதாம் உள்ளிட்ட வற்றையும் தின்று விட்டனர், அதில் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை நன்றி.,” என கூறியிருக்கிறார். சி.என்..என். செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.