அமெரிக்க உச்சநீதிமன்றம் முகநூல்
உலகம்

அதிபரின் உத்தரவுக்கு பெடரல் நீதிமன்றங்களால் தடை விதிக்க முடியாது- அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, ட்ரம்பிற்கு சாதகமானதாக கருதப்படுகிறது.

PT WEB

அமெரிக்க அதிபரின் தேசிய அளவிலான நிர்வாக உத்தரவுகளுக்கு, பெடரல் நீதிமன்றங்களால் தடை விதிக்க முடியாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை ரத்து செய்து ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவிற்கு, 3 பெடரல் நீதிமன்றங்கள் தடை விதித்தன. இதனை எதிர்க்கும் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய அளவிலான நிர்வாக உத்தரவுகளுக்கு தடை விதிக்கும் அதிகார வரம்பு, பெடரல் நீதிமன்றங்களுக்கு இல்லை என கூறியுள்ளது.

அதேவேளையில், பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை ரத்துக்கு 30 நாள் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தங்கள் உத்தரவில் திருத்தம் மேற்கொள்ள பரிசீலிக்குமாறு பெடரல் நீதிமன்றங்களை கேட்டுக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, ட்ரம்பிற்கு சாதகமானதாக கருதப்படுகிறது.