உகாண்டாவில் பரவும் புதுவித வைரஸ்...
உகாண்டா நாட்டில் புதுவிதமான டிங்கா டிங்கா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்குவதாகத் தெரிய வந்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு உடல் நடுக்கம் ஏற்படுவதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உகாண்டாவில் உள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300க்கும் அதிகமானவர்கள் டிங்கா டிங்கா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்துக்குள் குணமடைந்து விடுவதாகவும், புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் இந்த நோய் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்
பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்டி- பயோடிக் மருந்துகளை மட்டும் அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1518ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் “டான்சிங் பிளேக்“ எனப்படும் நோய் பரவியதாகவும், அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப்பாடின்றி உயிரிழக்கும் வரை தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள டிங்கா டிங்கா நோய் பாதிப்பாலும் சிலர் ஆண்டிக்கொண்டே இருப்பதால், இதற்கு டான்சிங் பிளேக் காரணமா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.