உலகம்

தகவல்களை பகிர்ந்தது உண்மையே : ஃபேஸ்புக் ஒப்புதல்

தகவல்களை பகிர்ந்தது உண்மையே : ஃபேஸ்புக் ஒப்புதல்

webteam

பயனாளர்களின் தகவல்களை செல்போன் கம்பெனிகளுக்கு வழங்கியது உண்மைதான் என ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புகொண்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம், சாம்சங் , ஆப்பிள் உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்ததாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்ட நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. ஆப்பிள், சாம்சங்  போன்ற செல்போன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டதை ஒப்புக் கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இதனால் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கூறியுள்ளது.

மேலும் மிகச்சிறந்த ஃபேஸ்புக் அனுபவத்தை கொடுப்பது எப்படி என்பதற்காகவே பயனாளர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்தது உண்மையே என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியது ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.