ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் தனது குற்றத்தை எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற செனட் பிரிதிநதிகள் முன்பு மார்க் ஸக்கர்பர்க் ஆஜராவதற்கு முன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் குற்றத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், இனி இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று எழுத்துப் பூர்வமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். ஃபேஸ்புக்கை தொடங்கியது தாம்தான் என்பதால் அதில் என்ன நடந்தாலும் தாமே பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களை நல்ல வழியில் ஒருங்கிணைப்பதற்கான சேவைகளை இனி பேஸ்புக் நிறுவனம் செய்யும் என உறுதியளித்துள்ளார்.