உலகம்

'இதயத்தைத் தழுவும் ஆறுதல் முகம்' - 7-வது எமோஜியை அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்!

webteam

பேஸ்புக் மேலும் ஒரு எமோஜியை அறிமுகம் செய்யவுள்ளது.

நம் எண்ணங்களை வெளிப்படுத்த குறுந்தகவல்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம் உணர்வுகளை வெளிப்படுத்த எமோஜிகள் முக்கியம். வார்த்தைகள் கடத்த முடியாத பல விஷயங்களைக் கூட ஒரு எமோஜி கடத்திவிடுகிறது.

சமூக வலைதளங்களில் எமோஜிகளின் பங்கு அதிகம். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஃபேஸ்புக்கில் கமெண்டுகளுக்கு லைக்கிடும் முறை மட்டுமே இருந்தது. பின்னரே ஆங்கிரி, ஹா ஹா, ஹார்ட், வாவ், க்ரை ஆகிய எமோஜிகள் இடம்பெற்றன. இது நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஃபேஸ்புக் மேலும் ஒரு எமோஜியை அறிமுகம் செய்யவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் பாதிப்படைந்துள்ள நிலையில் நண்பர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ’இதயத்தைத் தழுவும் ஆறுதல் முகம்’ என்ற எமோஜி அறிமுகமாகவுள்ளது. ஃபேஸ்புக்கில் இது ஏழாவது எமோஜியாக இருக்குமென கூறப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த எமோஜி உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது. அதேபோல் மெசேஞ்சரிலும் ’துடிக்கும் இதயம்’ எமோஜி ஒன்று அறிமுகமாகவுள்ளது. இந்த எமோஜிக்கள் பயனாளர்கள் இடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.