அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி மாகாணத்தில் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு வீசிய புயலில் வாஷிங்டன் டிசி இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு இப்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. கடும் மழை, புயல் காற்று காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.