கஜகஸ்தானின் மாங்கிஸ்ட்டாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர், உணவின்றி விலங்கினங்கள் அதிகளவில் செத்து மடியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குதிரை மற்றும் ஒட்டகங்களை வளர்க்கும் விவசாயிகள் அவற்றிற்கு உணவு அளிக்க இயலாமலும், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் தவித்து வருகின்றனர். குதிரை, ஒட்டகங்களுக்கான தீவனங்களின் விலையும் பன்மடங்கு எகிறியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது விழி பிதுங்கியுள்ளனர்.
எலும்பு தோலுமாய் தென்படும் குதிரைகளும், மடிந்த அவற்றின் எலும்புக் கூடுகளும் கஜகஸ்தானில் நிலவும் வறட்சியின் கோர முகத்தை உணர்த்துகின்றன.