ஷெரில் சாண்ட்பெர்க் ராய்ட்டர்ஸ்
உலகம்

”ஊழியரை படுக்கைக்கு அழைத்தார்” - ஃபேஸ்புக் Ex COO மீது குற்றச்சாட்டு.. விவாதத்தை கிளப்பிய புத்தகம்!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் சிஓஓவான ஷெரில் சாண்ட்பெர்க், தனது பெண் உதவியாளரை, 'படுக்கைக்கு வர' அழைத்ததாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் ஒருவர் எழுதியிருக்கும் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் சிஓஓவான ஷெரில் சாண்ட்பெர்க், தனது பெண் உதவியாளரை, தனியார் ஜெட் விமானத்தில் 'படுக்கைக்கு வர' அழைத்ததாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் ஒருவர் எழுதியிருக்கும் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷெரில் சாண்ட்பெர்க்

’கேர்லெஸ் பீப்பிள்: எ காஷனரி டேல் ஆஃப் பவர், பேராசை மற்றும் இழந்த ஐடியலிசம்’ (Careless People: A Cautionary Tale of Power, Greed, and Lost Idealism) என்ற புத்தகத்தை, சாரா வின்-வில்லியம்ஸ் என்பவர் எழுதியுள்ளார். 2017இல் வேலையைவிட்டு விலகுவதற்கு முன்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய சாரா வின்-வில்லியம்ஸ் அவர் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களையும் அவதூறான குற்றச்சாட்டுகளையும் இதில் தொகுத்துள்ளார்.

இதில், ஐரோப்பாவிற்கு ஒரு பயணத்தின்போது ஷெரில் சாண்ட்பெர்க், அவருக்கும், அவருடைய 26 வயது பெண் உதவியாளருக்கும் உள்ளாடைக்காக மிகப்பெரிய அளவில் 13,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.11.34 லட்சம்) செலவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெரில் சாண்ட்பெர்க் மற்றும் அவரது பெண் உதவியாளருக்கு உள்ளாடைகளை வாங்கும் பணி சாரா வின்-வில்லியம்ஸுக்கு வழங்கப்பட்டதாகவும், அதற்காக மொத்தச் செலவு 13,000 டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் செய்தி ஊடகம் ஒன்றின் புத்தக மதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாண்ட்பெர்க்கும் அவரது உதவியாளரும் ஐரோப்பா முழுவதும் ஒரு நீண்ட கார் பயணத்தின்போது ஒருவர் மடியில் ஒருவர் தூங்கியதாகவும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து மெட்டா நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர், “நிறுவனம் பற்றிய அவரது கூற்றுக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அவரது தவறான நடத்தைக்காக அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் புத்தகத்தை எழுதுவதற்குச் சிலர் பணம் கொடுத்ததாகவும், அதன்மூலமே அவற்றை அவர் சித்தரித்து எழுதியிருக்கிறார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனாவுக்கு ஆதரவாக மார்க் ஜூக்கர்பர்க் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகளை அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சாரா.