“இது மனிதர்களின் தவறாக இருக்கவே வாய்ப்பு அதிகம்” என்று சூயஸ் கால்வாயில் கப்பல் கரை தட்டியது குறித்து ஆணைய அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
உலகின் பிஸியான நீர் வழித்தாந்தடங்களில் ஒன்று சூயஸ் கால்வாய். கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் இந்த கால்வாயின் குறுக்கே தரை தட்டி நிற்பதால் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. இந்நிலையில் இது இது மனிதர்களின் தவறாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்றும். இயற்கையின் தாக்கம் இதில் இல்லவே இல்லை என்றும் சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஒசாமா ரபி தெரிவித்துள்ளார்.
முன்னதாக காற்று பலமாக வீசியதால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து தரை தட்டியதாக சொல்லப்பட்டது. “இது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம். அல்லது மனிதர்களின் தவறாக கூட இருக்கலாம். இதுவே இந்த கப்பல் தரை தட்டி நிற்க காரணம் என கருதுகிறேன். அதிகாரிகள் இதற்கு முன்னதாக சொன்னது போல வானிலை ஒரு காரணம் அல்ல என கருதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் இந்த சிக்கல் களையப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.