ஜெலன்ஸ்கி, ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

உக்ரைனுக்கு உதவிகள் வழங்க தீவிரம்.. ஐரோப்பா நாடுகள் ஆலோசனை!

உக்ரைனுக்காக பாதுகாப்பு சார்ந்த உதவிகளை வழங்குவது குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.

PT WEB

உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியது ஐரோப்பிய நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த செயலால் ரஷ்யாவின் கரம் வலுப்பெறுமென கருதும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், பாதுகாப்பிற்காக வரும் நாட்களில் அமெரிக்காவை சார்ந்திருக்காமல் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் போதிய நிதியை திரட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் கூடுகின்றனர். அப்போது, ரஷ்யாவின் எதிர்க்கால திட்டங்கள், ஐரோப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை தொடர்பாக அவர்கள் ஆலோசிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விளாடிமிர் ஜெலன்ஸ்கி

இந்த நிலையில் உக்ரைனுக்கு பிரான்ஸ் உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபஸடியன் லெகோர்னு, ”எங்களுடைய புலனாய்வு இறையாண்மை கொண்டது. நாங்கள் புலானாய்வை கொண்டுள்ளோம். அதை உக்ரைன் பயனடைய நாங்கள் அனுமதிக்கிறோம். அமெரிக்கா உதவியை நிறுத்தியதால், அதை ஈடுசெய்யும் அளவிற்கு பல்வேறு உதவி தொகுப்புகளை விரைவுப்படுத்துங்கள் என அதிபர் இமானுவேல் மேக்ரான் கேட்டுக்கொண்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.