Paris Louvre Museum  reuters
உலகம்

கோடிகளில் கலைப்பொருட்கள் கொள்ளை.. ஐரோப்பிய அருங்காட்சியகங்களை குறிவைக்கும் மர்ம கும்பல்?

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், வியன்னா உள்ளிட்ட நாடுகளில் மர்ம கும்பல்கள் சில நிமிடங்களில் துணிச்சலாக புகுந்து கொள்ளை நடத்தி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள் என புலனாய்வு கூறுகிறது.

PT WEB

ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் அண்மையில் கோடிக்கணக்கான யூரோ மதிப்பிலான ஓவியங்கள், தங்க நகைகள், அரிய கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவது பாதுகாப்பு அமைப்புக்கு பெரும் சவாலாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் அண்மைக் காலமாக அருங்காட்சியகங்களைக் குறிவைத்து அதிர்ச்சி தரும் வகையில் கலைப் பொருட்கள் மற்றும் அரிய ஓவியங்கள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில், பல மில்லியன் யூரோ மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

Paris Louvre Museum

அண்மையில் பிரான்ஸின் ரென்வா அருங்காட்சியகத்தில் புகுந்த மர்ம நபர்கள், மூன்று நிமிடங்களுக்குள் பல கோடி மதிப்பிலான அபூர்வ ஓவியங்களைக் திருடிச் சென்றுள்ளனர். இத்தாலியில் உள்ள கலைக்கூடங்களிலும் தொடர்ச்சியாக இத்தகைய துணிச்சலான கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பாரிஸின் உலகப் புகழ்பெற்ற 'லூவர்' <<Louvre>> அருங்காட்சியகத்தில் 88 மில்லியன் யூரோ மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையிலும், இதுவரை அந்த நகைகள் மீட்கப்படவில்லை

பிரான்ஸின் பிற சிறிய அருங்காட்சியகங்கள், வியன்னாவில் வைர நெக்லஸ், ஸ்பெயினில் வெண்கல கால கலைப்பொருட்கள் மற்றும் இத்தாலியின் 2 கலைக்கூடங்கள் என ஐரோப்பா முழுவதும் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வங்கி மற்றும் நகைக்கடைகளுடன் ஒப்பிடும்போது, அருங்காட்சியகங்கள் பழமையான கட்டிடங்களில் இயங்குவதும், போதிய பாதுகாப்பு இல்லாததுமே கொள்ளைகள் அதிகரிக்க காரணம் என புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட அரிய கலைப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.