’வான்னா கிரை’ ரான்சம்வேர் இணைய வைரஸையடுத்து, அதைவிட பயங்கரமான எட்டர்னல் ராக்ஸ் (ETERNAL ROCKS) என்ற இணைய வைரஸ் கணினிகளைத் தாக்கும் அபாயம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பிரபல இதழான ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ள செய்தியில், பணம் பறிக்கும் நோக்கத்துடன் மின்னஞ்சல் மூலம் பரப்பப்படும் வகையில் புதிய வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவும் அமெரிக்க உளவு அமைப்பான என்.ஐ.ஏ.விடமிருந்து திருடிய இணைய தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்ட வைரஸ் என்று தெரியவந்துள்ளது.
விண்டோஸ் கணினி மென்பொருள் குறைப்பாட்டைப் பயன்படுத்தி அதில் உள்ள தகவல்களை எட்டர்னல் ராக்ஸ் வைரஸ் முடக்கும். வான்னா கிரை ரான்சம்வேர் வைரஸைவிட, எட்டர்னல் ராக்ஸ் பன்மடங்கு ஆபத்தானது என்று ஃபார்ச்சூன் இதழ் தெரிவித்துள்ளது.