5 ஆண்டுகள் சிரியாவில் அகதிகளாக இருந்துவிட்டு கனடாவிற்கு இடம்பெயர்ந்த அகதிக் குழந்தைகள் இருவர் முதல் முறையாக பணிப்பொழிவை ரசித்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எரிட்ரியாவில் நடைபெற்ற போர் காரணமாக தனது மகள் மற்றும் மகனுடன் தாய் ஒருவர் சிரியாவிற்கு அகதியாக வருகை தந்துள்ளார். அங்கு 5 வருடங்கள் அகதிகள் முகாமில் தங்கிய அவர், பின்னர் நீண்ட முயற்சிக்கு பின்னர் கனடாவிற்கு தனகு குழந்தைகளுடன் இடம்பெயர்ந்துள்ளார். தற்போது கனடாவில் பனிப்பொழிவு காலம் என்பதால், அங்கு பெய்த பனிப்பொழிவை அகதிகளாக வந்த அக்கா மற்றும் தம்பி ஆகிய இரண்டு குழந்தைகளும் முதல் முறை கண்டு விளையாடின.
கிழக்கு ஆப்பிரிக்க வெப்பநிலை அதிகமான பகுதி என்பதால் அங்கு வெயில் வாட்டியெடுக்கும். அப்படிப்பட்ட நாட்டில் வாழ்ந்து பின்னர் சிரியாவில் வசித்த அக்குழந்தைகள், முதல்முறை பனிப்பொழிவை கண்டது மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அந்தக் குழந்தைகள் மற்றும் தாய்க்கு ஆதரவாக இருக்கு பிரபலமான ரெபெக்கா டேவிஸ், குழந்தைகள் பனிப்பொழிவில் மகிழ்வதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு, பகிர்ந்துள்ளனர். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து, “கனடாவிற்கு வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.