உலகம்

கன்னிவெடிகளை அகற்றிய எலி - தங்கப்பதக்கம் அணிவித்து கெளரவப்படுத்திய இங்கிலாந்து!

கன்னிவெடிகளை அகற்றிய எலி - தங்கப்பதக்கம் அணிவித்து கெளரவப்படுத்திய இங்கிலாந்து!

sharpana

கம்போடிய நாட்டில் கன்னிவெடிகளை அகற்றிய எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்துள்ள நிகழ்வு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

கம்போடிய நாட்டில் பாதுகாப்புகளுக்காக 6 மில்லியன் வரை கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கன்னிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம் பேருக்குமேல் இறந்துள்ளனர். இதனால், கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாக கன்னிவெடிகளை அகற்றி வருகிறது.

மனிதர்கள் அகற்றினால் உயிருக்கு ஆபத்து வரும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த எண்ணியது. அப்போதுதான், ஆப்பிரிக்க எலி மாகவா கன்னிவெடிகளை அகற்றக்கூடியது என்று கம்போடிய அரசுக்கு தெரியவந்துள்ளது. கன்னிவெடிகளை அகற்றுவதற்காகவே மாகவா பயிற்சியும் எடுத்துள்ளது. அந்த எலியை கம்போடியா  கொண்டு வந்து கடந்த ஏழு வருடங்களில் 39 கன்னிவெடிகளை அகற்றியுள்ளனர். வெடிக்காத 28 பொருட்களையும் மாகவா அகற்றியுள்ளது.

அதோடு, 1 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர அடிகளை மாகவா தோண்டியுள்ளது. இது 20 கால்பந்து ஆடுகளங்களுக்கு சமமானது என்று சொல்லப்படுகிறது. இந்த எலியின் அரும்பணியை பாராட்டும் விதமாக இங்கிலாந்தின் கால்நடை அமைப்பு மாகவா எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கியுள்ளது. “மாகவா எலி ஒரு சூப்பர் ஹீரோ. மனிதர்களை காப்பாற்றுவதில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டது” என்றும் பாராட்டியுள்ளது. மேலும், இந்த வகை எலிகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.