Iranian Supreme Leader's Representative Dr. Abdul Majid Hakeem Ilahi web
உலகம்

'போரை நிறுத்தச் சொல்லுங்கள்; நாங்கள் துன்புறுகிறோம்' - இந்தியாவின் ஈரான் தூதர்!

போரைத் தொடங்கியவர்களை நிறுத்த சொல்லுங்கள், நாங்கள் அவதிப்படுகிறோம் என்று இந்தியாவில் உள்ள ஈரான் தூதர் உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார் .

PT WEB

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் ஈரான் உயர்மட்டத் தலைவர் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து ஈரான் ஆட்சியை மூன்று நாட்களில் கவிழ்க்க நான்கு ஆண்டுகள் திட்டமிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவிற்கான ஈரானின் உயர்மட்டத் தலைவர் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய கிழக்கு போரின் பாதிப்புகள் குறித்துப் பேசினார்.

iran war

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஆட்சியை மூன்றே நாட்களில் கவிழ்க்க நான்கு ஆண்டுகளாகத் திட்டமிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். போரின் தொடக்கத்திலேயே ஈரானின் உயர்மட்டத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் முதல் கட்டத் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஓமன் மற்றும் ஜெனீவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகத் தொடங்கிய நிலையில், திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இலாஹி வருத்தம் தெரிவித்தார். ஈரான் போரைத் தவிர்க்க முயன்ற போதிலும், அதற்குள் கட்டாயமாக இழுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்