உலகம்

உயிரைக்காப்பாற்றிய காவலர் வீட்டில் கதறிய நீதிபதி!

உயிரைக்காப்பாற்றிய காவலர் வீட்டில் கதறிய நீதிபதி!

webteam

இலங்கையில் நீதிபதியின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்த காவலரின் மனைவி முன்பு, நீதிபதி தலைகுனிந்து கதறி அழும் காட்சிகள் காண்பவர்களையும் கண் கலங்க செய்தது. 

இலங்கை யாழ்ப்பாண நீதிபதியான மாணிக்‍கவாசகர் இளஞ்செழியன், நல்லூர் சந்திப்பு வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, காரின் அருகே வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென நீதிபதியை நோக்‍கி துப்பாக்‍கியால் சரமாரியாகச் சுட்டார். அப்போது,​ குறுக்‍கே வந்த நீதிபதியின் காவலர் அதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தன்னை காப்பாற்றுவதற்காக, உயிரிழந்த காவலரின் மனைவியின் முன்பு தலைகுனிந்து நீதிபதி கதறி அழும் வீடியோ காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. இது காண்பவர்களையும் கண் கலங்க செய்துள்ளது.