உலகம்

கேம் ஆஃப் த்ரோன்ஸூக்கு சிறந்த டிராமா விருது

கேம் ஆஃப் த்ரோன்ஸூக்கு சிறந்த டிராமா விருது

webteam

71ஆவது எம்மி விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த டிராமாவுக்கான விருதை கேம் ஆஃப் த்ரோன்ஸ் தட்டிச் சென்றது.

சிறந்த தொலைக்காட்சி மற்றும் வெப் தொடர்களுக்காக ஆண்டுதோறும் அமெரிக்காவில் எம்மி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் புகழ்பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸூக்கு சிறந்த டிராமாவுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த தொடரின் இறுதி பாகம் கடந்த ஏப்ரலுடன் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு எம்மி விருதுகளில் பல்வேறு பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 

சிறந்த நடிகர் விருது போஸ் தொடரில் நடித்த பில்லி போர்ட்டருக்கும், சிறந்த நடிகை விருது கில்லிங் ஈவில் தோன்றிய ஜோடி கோமருக்கும் வழங்கப்பட்டது. சிறந்த காமெடி தொடராக அமேசானின் வெப் தொடரான ஃப்லீபேக் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த குறுந்தொடர் விருது, செர்னோபில்லுக்கு அளிக்கப்பட்டது. சிறந்த துணை நடிகர் விருதை கேம் ஆஃப் த்ரோனில் நடித்த பீட்டர் பெற்றுக் கொண்டார்.