எலான் மஸ்க் உலகம்
உலகம்

G-Mail க்கு மாற்றாக x மெயில்? எலான் மஸ்க் போடும் மாஸ்டர் பிளான் என்ன?

விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பரப்புரைகள் வரை எல்லாவற்றிலும் ஏதோவொரு பெரும் திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க்.

PT WEB

எலான் மஸ்க் G-மெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயிலை கொண்டு வரப்போவதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.

விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பரப்புரைகள் வரை எல்லாவற்றிலும் ஏதோவொரு பெரும் திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள், ஏவுகணைகளை ஏவுதல் என மும்முரமாக இருந்த அவர், டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார்.

தற்போது G-மெயில் மென்பொருளுக்கு மாற்றாக எக்ஸ் மெயில் மென்பொருளைப் புதிதாக அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே அவர் ஐபோனுக்கு மாற்றாக புதிய மொபைலை கொண்டு வரப்போவதாகவும் கூறப்படுகிறது.