elon musk x page
உலகம்

160 நாடுகளின் ஜிடிபியைவிட மஸ்க்கின் சொத்துமதிப்பு அதிகம்.!

தைவான், சிங்கப்பூர், நார்வே, மலேசியா உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட நாடுகளின் ஜிடிபியை மிஞ்சும் மஸ்க்கின் சொத்து மதிப்பு .

PT WEB

SpaceX நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 20% வரை உயர்ந்ததால், எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு டிரில்லியன் டாலரை கடந்திருக்கிறது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் (Nasdaq) பட்டியலாகி உள்ள நிலையில், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒன்று புள்ளி 11 டிரில்லியன் டாலராக உயர்ந்து, அவர் உலகின் முதல் 'டிரில்லியனர்' என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அவரது இந்தச் சொத்து மதிப்பு தைவான், சிங்கப்பூர், நார்வே, மலேசியா உட்பட உலகிலுள்ள 160க்கும் மேற்பட்ட நாடுகளின் தனித்தனி ஜிடிபியை விடவும் அதிகமாகும். குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டின் ஆண்டு ஜிடிபியை விட மஸ்க்கின் சொத்து மதிப்பு 2.5 மடங்கு அதிகம்.

எலான் மஸ்க்

மேலும், இந்தியாவின் முக்கிய மாநிலங்களான மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட 2 மடங்குக்கும் மேலாகவும், தமிழ்நாட்டின் ஜிடிபியை விடக் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகவும் இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.