அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்த அமைக்கப்பட்ட துறையின் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க்கை அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார். இவர் எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் அமெரிக்காவில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் நிலையில் அடுத்து ஒரு அதிரடி கருத்தை மஸ்க் வெளியிட்டுள்ளார்.
துபாயில் நடைபெற்ற உலக அரசுத்துறை தொடர்பான உச்சி மாநாட்டில் காணொளி முறையில் பேசிய எலான் மஸ்க், ”வயல்களில் களைகளை வேரோடு அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவை மீண்டும் மீண்டும் வளரும். எனவே அரசுத் துறைகளில் ஆட்களை நீக்குவதற்கு பதில் ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு சீரமைப்புகளுக்கு பின் அவற்றை புதிதாக உருவாக்கவேண்டும்.
மக்களின் ஜனநாயக ஆட்சி முறைக்கு அரசுத் துறைகள் எதிராக இருக்கின்றன” எனத் தெரிவித்தார். அமெரிக்காவில் அரசுத்துறைகளில் பணிபுரிவர்கள் ஏராளமானோரை விருப்ப ஓய்வு கொடுத்து மஸ்க் வெளியேற்றியுள்ள நிலையில் அவருக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம் வெடித்துள்ளது.