எலான் மஸ்க், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

உலக நாடுகள் மீது வரிவிதிப்பு | அதிபர் ட்ரம்ப்விடம் கோரிக்கை வைத்த எலான் மஸ்க்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள பிறநாடுகளுக்கான புதிய வரிகளை திரும்பப் பெற, தொழிலதிபரும் ட்ரம்பின் ஆலோசகர்களில் முக்கியமானவருமான எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள பிறநாடுகளுக்கான புதிய வரிகளை திரும்பப் பெற, தொழிலதிபரும் ட்ரம்பின் ஆலோசகர்களில் முக்கியமானவருமான எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க், ட்ரம்ப்

கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப், உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு புதிய வரிகளை விதித்தார். சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வரி விகிதத்தை கடுமையாக அதிகரித்தார். கடந்த வார இறுதியில், இந்த வரிவிதிப்புகளை திருமப் பெற ட்ரம்பிடம் மஸ்க் நேரடியாக வலியுறுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் இதழில் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற ட்ரம்பின் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஸ்க் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்துக்கு எந்த விதமான வரியும் விதிக்கப்படக் கூடாது என்றும் மஸ்க் வலியுறுத்தி வருகிறார். மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் சரிவடைந்து வருகின்றன. அமெரிக்க அரசுக்கு மஸ்க் ஆலோசகராகச் செயல்படத் தொடங்கியதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்று வணிக நிபுணர்கள் கூறுகின்றனர். வாகனங்கள் மீதான ட்ரம்பின் வரிவிதிப்பு அறிவிப்புகள் டெஸ்லா நிறுவனத்தை கடுமையாக பாதிக்கும் என்று மஸ்க் கூறியிருந்தார்.