உலகம்

ட்விட்டர் 2.0-க்காக கடுமையாக போராடும் ஊழியர்கள்... அறிமுகமான அடுத்த புதிய வசதி!

JustinDurai

ட்விட்டரில் ‘லைவ் ட்வீட்டிங்’ எனும் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளார் எலான் மஸ்க்.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, பயனர்களுக்கு புதிய வசதி, நிர்வாக சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அவர். இதனிடையே டிவிட்டர் 2.0 உருவாக்கப் போவதாகவும், இந்தப் பயணத்தில் ஊழியர்கள் கடுமையாகப் பணியாற்ற வேண்டியிருக்கும் எனவும் எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் ‘லைவ் ட்வீட்டிங்’ எனும் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளார் எலான் மஸ்க். அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் மாட் தைப்பி, இந்த அம்சத்தைப் பயன்படுத்திய முதல் பயனர் ஆவார். அவர் "த்ரெட்: தி ட்விட்டர் ஃபைல்ஸ்" என்ற தனது நூலை ‘லைவ் ட்வீட்டிங்’ மூலம் அறிவித்தார்.

‘லைவ் ட்வீட்டிங்’ வசதி தற்போது சோதனை முயற்சியில் மட்டுமே உள்ளது. விரைவில் அனைத்து தளங்களிலும் இந்த அம்சம் கிடைக்கும் என கூறப்படுகிறது.  

முன்னதாக ட்வீட்களின் எழுத்து வரம்பை 280-இல் இருந்து 1000-ஆக உயர்த்த பரிந்துரை செய்த ட்விட்டர் பயனருக்கு "நல்ல யோசனை" என்று எலோன் மஸ்க் பதிலளித்தார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவற விடாதீர்: ``வணக்கம்டா மாப்ள ஆப்பிள் ஆஃபிஸிலிருந்து; டிம் தெளிவா சொல்லிட்டாரு...” எலான் போட்ட ட்வீட்!