உலகம்

ஜோ பைடன் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேர்வாளர்கள் குழு!

ஜோ பைடன் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேர்வாளர்கள் குழு!

webteam

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

பரபரப்பாக நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜனவரி 20-க்கு மேல் அவர் பதவி ஏற்பார் எனத் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையே டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வந்தார்.

மேலும் அவர், "தேர்தலில் மிகப்பெரிய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது" என்று கூறி நீதிமன்றபடியும் ஏறினார். ஆனால் பைடனோ, "ட்ரம்ப் இப்படி நடந்துகொள்வது எனக்கு சங்கடத்தை தருகிறது. மிகவும் வெளிப்படையாக, இது ஜனாதிபதியின் மரபுக்கு உதவாது என்று நான் நினைக்கிறேன். ஜனவரி 20 ஆம் தேதிக்குள், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பது ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பாகும்" என்று தெரிவித்து அடுத்தக்கட்ட வேலையை தொடங்கி இருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறுதியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் 306, ட்ரம் 232 வாக்குகளும் பெற்றதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஃபாக்ஸ் ந்யூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ட்ரம்ப், தேர்தல் முறைகேடு தொடர்பான தனது சில வழக்குகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டபோதிலும் மற்ற சில சவால்களை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது