உலகம்

சர்வதேச தடைகள் எதிரொலி -ரஷ்ய பணத்தின் மதிப்பில் சரிவு

கலிலுல்லா

ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் விளைவாக அந்நாட்டு பணமான ரூபிளின் மதிப்பு வெகுவாக சரிந்தது. இதனால் ரஷ்யாவில் பலரும் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்த தடையால் ரஷ்ய ரூபிளில் மதிப்பு சுமார் 30 சதவிகிதம் குறைந்தது. இதை கட்டுப்படுத்த ரஷ்ய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது. மேலும் ரஷ்ய பங்குச் சந்தைகள் ஒரு நாள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவால் தன்னுடைய அன்னிய செலவாணியையும் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபிளின் மதிப்பு சரியும் போது அதை சந்தையில் வாங்கி மதிப்பை உயர்த்த மத்திய வங்கிக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எதிர்வரும் நாட்களில் ரஷ்யா வெளிநாடுகளிலிருந்து எதையும் இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.