தென் அமெரிக்க நாடான சிலியில் கலாமா என்னும் நகருக்கு வடமேற்கில் 84 ஜிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய கண்டத்தின் நில நடுக்கவியல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகவும் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை இந்நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 05:44 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா அல்லது உயிரிழப்புகள் இருக்கிறதா என்பது குறித்தான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் நிலநடுக்கத்தை தொடந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் நிலநடுக்கத்தின்போது அங்குள்ள கட்டடங்கள், பொருட்கள் அதிரும் காட்சிகள் வெளியாகியுள்ளது.