இந்தோனேஷியாவில் சுமத்திரா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும் சுனாமி பயமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் பெங்குளூவில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் இது 6.4ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். சேதம் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் இல்லை.