மேற்காசியப் போர் காரணமாக துபாய் ரியல் எஸ்டேட் சந்தை பெரும் சரிவைக் கண்டுள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டில் வீடுகள் விற்பனை 16% குறைந்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான அனராக் கூறியுள்ளது. வீடுகளின் வாடகையும் 4 முதல் 7% வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக துபாய் ரியல் எஸ்டேட் துறை அபார வளர்ச்சியை கண்டுவந்தது.
கடந்தாண்டில் மட்டும் 150 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் துபாயில் வீடுகளை வாங்கினர். கடந்தாண்டு மட்டும் 23 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு குடியிருப்புகள், அலுவலகங்கள் வாங்கப்பட்டன. இதில் இந்தியர்கள் மட்டும் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வீடுகளை வாங்கினர். கோல்டன் விசா சலுகை, நல்ல வாடகை வருமானம், இந்தியா - அமீரகம் இடையே சிறந்த போக்குவரத்து வசதி போன்றவை இதற்குக் காரணமாக இருந்தன. ஆனால், கடந்த பிப்ரவரி கடைசி நாளில் தொடங்கிய போர் துபாய் ரியல் எஸ்டேட் தொழிலை கடுமையாகப் பாதித்துள்ளது. முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.