பிரெஞ்ச் மொன்டானா, ஷேக்கா மஹ்ரா எக்ஸ் தளம்
உலகம்

கணவரை இன்ஸ்டா மூலம் விவாகரத்து செய்த ’துபாய் இளவரசி’.. ராப்பர் பாடகருடன் நிச்சயதார்த்தம்!

துபாய் நாட்டு இளவரசியான ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீத் அல் மக்தூம், ராப்பர் பிரெஞ்ச் மொன்டானாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

Prakash J

துபாய் நாட்டு இளவரசியான ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீத் அல் மக்தூம், ராப்பர் பிரெஞ்ச் மொன்டானாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம். இவருடைய குழந்தைகளில் ஷேக்கா மஹ்ராவும் ஒருவர். இவர், ’துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் குழந்தை பிறந்தது. இதைக் கொண்டாடிய நிலையில், அடுத்த இரு மாதங்களில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக ஷேக்கா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

பிரெஞ்ச் மொன்டானா, ஷேக்கா மஹ்ரா

இந்த நிலையில், ஷேக்கா மஹ்ரா, ராப்பர் பிரெஞ்ச் மொன்டானாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இந்த ஜோடி, ஜூன் மாதம் பாரிஸ் ஃபேஷன் வீக்கின்போது தங்கள் உறவை முறைப்படுத்தியதாக மொன்டானாவின் பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், 31 வயதான இளவரசிக்கும், 40 வயதான ராப்பர் பாடகருக்கும் இடையே 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தொடர்பு இருப்பதாகவும், அப்போதிருந்து, அவர்கள் அடிக்கடி பாலைவன நகரத்திலும் மொராக்கோவிலும் ஒன்றாகக் காணப்படுவதாகவும், அந்தப் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாரிஸில் நடந்த ஃபேஷன் நிகழ்வுகளில் இந்த ஜோடி கைகோர்த்து தோன்றியபோது அவர்களின் காதல் வெளியுலகிற்குத் தெரிய வந்தது.

பிரெஞ்சு மொன்டானாவின் உண்மையான பெயர் கரீம் கார்பூச் என்பதாகும். அவர், மறக்க முடியாத மற்றும் நோ ஸ்டைலிஸ்ட் போன்ற உலகளாவிய வெற்றிகளுக்கு மிகவும் பிரபலமானவர். உகாண்டா மற்றும் வடஆப்பிரிக்கா முழுவதும் சுகாதாரம் மற்றும் கல்வித் திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலம் நற்பெயரைப் பெற்றுள்ளார். முதலில் (2007 முதல் 2014 வரை) பிரெஞ்சு மொன்டானா, தொழில்முனைவோர் மற்றும் வடிவமைப்பாளரான நதீன் கார்பூச்சை மணந்துகொண்டார். அவர்களுக்கு 16 வயது மகன் க்ரூஸ் கார்பூச் உள்ளார்.