உலகம்

நயன்தாரா போஸ் கொடுத்த துபாய் கட்டடம்: புத்தாண்டில் திறப்பு

நயன்தாரா போஸ் கொடுத்த துபாய் கட்டடம்: புத்தாண்டில் திறப்பு

webteam

துபாயில் ஃபிரேம் வடிவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதுமையான கட்டடம் பார்வையாளர்களுக்காக புத்தாண்டு அன்று திறக்கப்படவுள்ளது. 

துபாயில் 360 டிகிரி கோணத்தில் நகரை கண்டுகளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுடன் கட்டடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அமைந்துள்ள கண்ணாடி பாலம் போலவே, இந்தக் கட்டடத்தின் உச்சியில் கண்ணாடி பாலம் நிறுவப்பட்டுள்ளது. அதன் வழியாக சென்று பல அடி ஆழத்துக்கு கீழே உள்ள காட்சிகளையும் பார்வையாளர்கள் தெளிவாக கண்டுகளிக்க முடியும். 

இந்தக் கட்டடம் புத்தாண்டு பரிசாக ஜனவரி 1ஆம் தேதி அன்று பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தின் ஒரு புறத்தில் நவீன துபாயையும், மறுபுறத்தில் துபாயின் பாரம்பரியத்தையும் நிபுணர்கள் அமைத்துள்ளனர். அத்துடன் மேலே உள்ள கண்ணாடி பாலத்தில் நின்று பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்தக் கட்டடத்தை கட்ட 250 மில்லியன் திரகம் செலவாகியுள்ளது. இந்திய மதிப்பில் 434.25 கோடி ஆகும். கட்டடக் கலைக்கு சிறப்பு சேர்க்கும் இந்தக் கட்டடம் துபாயின் புதிய அடையாள கோபுரமாகவும் மாறியுள்ளது. இந்தக் கட்டடத்தின் அருகில் நின்று தான் நடிகை நயன்தாரா அண்மையில் புகைப்படம் எடுத்திருந்தார். பாலகிருஷ்ணாவின் தெலுங்கு படம் ஒன்றின் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட அப்புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.