உலகம்

துபாய் ஏர்போர்ட்டில் பராமரிப்பு பணி: 45 நாட்களுக்கு ரன் வே மூடல்!

துபாய் ஏர்போர்ட்டில் பராமரிப்பு பணி: 45 நாட்களுக்கு ரன் வே மூடல்!

webteam

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், எமிரேட்ஸ் விமானங்கள் தவிர்த்து மற்ற விமானங்கள் 45 நாட்களுக்கு துபாய் விமான நிலைய ஓடுதளத்தைப் பயன்படுத்த முடியாது.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் விமானநிலையங்களில் ஒன்றும் துபாய் சர்வதேச விமான நிலையம். தினமும் இங்கிருந்து ஏராளமான விமா னங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறது. இந்த விமான நிலையத்தில், ஓடுதள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 16 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை எமிரேட்ஸ் நிறுவன விமானங்கள் தவிர மற்ற விமானங்கள் இங்கு தரையிறங்க முடியாது.

அதற்குப் பதிலாக, துபாயில் இருந்து 59 கி.மீ தூரத்தில் ஜெபல் அலி பகுதியில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செயல்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சூடான், ஜோர்டான், சவுதி அரேபியா, நேபாளம் உட்பட 42 நாடுகளின் விமான சேவைகள் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமானங்கள் வழக்கம்போல் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயங்கும். வழக்கத்தை விட 25 சதவீதம் குறைவாக இயக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பயணிகளின் பொருளாதார சிரமத்தை குறைக்கும் வகையில் ஜெபல் அலி விமான நிலையத் திலிருந்து துபாய் செல்லும் டாக்சிகளுக்கான தொகையை 75 சதவீதம் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் காரணமாக, சென்னை, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், கொச்சி, கோவா, பெங்களூரில் இருந்து அங்கு செல்லும் ஏர் இந்தி யா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ஷார்ஜா விமான நிலையத்தை பயன்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.