மூன்று வாகனங்கள் மீது மோதிவிட்டு காவல்துறையிடம் இருந்து ஒரு பெண் காரில் தப்பிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. திருட்டு மற்றும் ஆவண மோசடி வழக்கில் அந்தப் பெண் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தின்போது அந்தப் பெண் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.