ஜப்பானில் விமானத்தில் மது போதையில், பயணி ஒருவர் சக பயணியை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
ஜப்பானிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது மது போதையில் இருந்த ஒரு பயணி தனக்கு பின்னால் அமர்ந்திருந்த இளைஞரை தாக்க தொடங்கினார். இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில், விமானப் பணிபெண் வந்து இருவரையும் விலக்கிவிட்டார். ஆனால் சில நிமிடங்களில் மது போதையில் இருந்த பயணி மீண்டும் வந்து அந்த இளைஞரை தாக்கினார். இதனை அடுத்து மது போதையில் இருந்த பயணி, விமானத்துக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டார்.