உலகம்

வீட்டின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் – உயிர் தப்பிய ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி

Veeramani

இன்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் இல்லத்தை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் நடத்திய கொலைமுயற்சியில் இருந்து அவர் உயிர்தப்பினார்.

ஒரு ட்ரோன் பிரதமரின் வீட்டை குறிவைத்து தாக்க முயன்றது என்றும், இதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஈராக் பிரதமரின் ட்வீட்டில், "துரோகத்தின் ராக்கெட்டுகள் விசுவாசிகளை சோர்வடைய செய்யாது” என்று கூறினார்.

மேலும், “மக்களை பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்டவும், சட்டத்தை அமல்படுத்தவும் உழைக்கும் நமது வீரமிக்க பாதுகாப்புப் படைகளின் உறுதியும், போராட்டமும் தளர்ந்துவிடாது. நான் நலமாக இருக்கிறேன், கடவுளை போற்றுகிறேன். ஈராக் நலனுக்காக அனைவரிடமிருந்தும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

அரசாங்க கட்டிடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இப்பகுதியில் நடந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.