உலகம்

ஆளில்லா விமானங்களை பிடிக்கும் கழுகு திட்டம்

ஆளில்லா விமானங்களை பிடிக்கும் கழுகு திட்டம்

Rasus

அமெரிக்காவில் உள்ள ஏர்ஸ்பேஸ் சிஸ்டம் என்னும் நிறுவனம் ஆளில்லா விமானங்களை பிடிப்பதற்கான கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.

பொதுவாக வெளிநாடுகளில் ஆளில்லா விமானங்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இது சகஜமானதாக பார்க்கப்பட்டாலும், ராணுவ விடுதிகள், பொது இடங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் வேவு பார்க்கும் வேலைகளும், குண்டு போடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் ஆளில்லா விமானங்களை கட்டுக்குள் கொண்டுவர பல வழிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தற்போது ஆளில்லா விமானங்களை சுடாமல் அப்படியே பிடிக்கும் கருவியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.