உலகம்

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல்

EllusamyKarthik

தொழில்நுட்ப வளர்ச்சியை ஒருபக்கம் வரமாகவும், மறுபக்கம் சாபமாகவும் பார்க்கலாம். அந்த வகையில் அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திங்கள் அன்று காலை அபுதாபியில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் மற்றும் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட, ட்ரோன் மூலம் நடந்த தாக்குதல் காரணம் என அபுதாபி போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு முன்னதாக கடந்த 2019-இல் சவூதி அரேபியாவில் அமைந்திருந்த இரண்டு எரிபொருள் உற்பத்தி கூடத்தின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.