தீப்பிடித்த காரிலிருந்து, அதில் பயணித்தவர்களை மீட்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
அசர்பைஜான் நாட்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் பின்னால் மற்றொரு கார் மோதியது. இதில், முன்னால் சென்ற காரில் தீப்பிடித்தது. இதைப்பார்த்த ஒருவர், தீப்பிடித்து எரிந்த காரிலிருந்து, அதில் பயணம் செய்தவர்களை துணிச்சலுடன் மீட்டார். கார்களின் கதவுகள் திறக்க முடியாதநிலையில் கண்ணாடியை உடைத்து பத்திரமாக மீட்ட அந்த நபருக்கு பாராட்டு குவிந்துவருகிறது.